\
மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு - கஞ்சா போதையில் வாலிபர் செய்த வெறிச்செயல்

மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு - கஞ்சா போதையில் வாலிபர் செய்த வெறிச்செயல்

மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு - கஞ்சா போதையில் வாலிபர் செய்த வெறிச்செயல்
Published on

ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரத்தில் கஞ்சா போதையில் இருந்த 20 வயது வாலிபர் ஒருவர், 5 வயது சிறுவன் மற்றும் 70 வயது மூதாட்டியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் என்னும் கிராமத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் 70 வயது மூதாட்டி தனது ஐந்து வயது பேரன் புவியரசனுடன் வசித்து வருகிறார். யுவராஜ் தொடர்ச்சியாக கஞ்சா போதையில் அவ்வபோது அப்பகுதியில் எப்போதும் பிரச்னையில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் கஞ்சா போதையில் இருந்த யுவராஜ் தனது வீட்டின் வாயிலில் பூக்கட்டி கொண்டிருந்த மூதாட்டி நாகம்மாளை திடீரென தனது வீட்டிற்குள் தரதரவென இழுத்துச்சென்று கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டியுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவன் புவியரசனையும் அரிவாளால் வெட்டிவிட்டு வெளிப்பக்க கதவை தாழிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மூதாட்டியின் அழுகுரல் கேட்கவே அக்கம்பக்கத்தினர் வெளிப்பக்கம் மூடியிருந்த கதவை திறந்தபோது ரத்த வெள்ளத்தில் மூதாட்டியும் சிறுவனும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து யுவராஜின் தாய் - தந்தையரை விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும் தலைமறைவான யுவராரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com