\
ஆந்திராவில் செம்மரங்களை வெட்டியதாக  2 தமிழர்கள் கைது

ஆந்திராவில் செம்மரங்களை வெட்டியதாக 2 தமிழர்கள் கைது

ஆந்திராவில் செம்மரங்களை வெட்டியதாக 2 தமிழர்கள் கைது
Published on: 

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காஜிப்பேட்டை அருகே வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக த‌மிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  தும்பலகட்டா வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 30க்‌கும் மேற்பட்டோர் செம்மரங்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காவல்துறையினரைக் கண்டதும் அனைவரும் தப்பியோடியபோது, வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதிகுதிகளைச் சேர்ந்த பெருமாள், வடிவேலு ஆகிய இருவரை மட்டும் பிடித்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 26 செம்மரங்களை பறிமுதல் செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com