\
பஞ்சாப்: பிறந்தநாள் கேக்கை பூசிக் கொள்வதில் கைகலப்பு - 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

பஞ்சாப்: பிறந்தநாள் கேக்கை பூசிக் கொள்வதில் கைகலப்பு - 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

பஞ்சாப்: பிறந்தநாள் கேக்கை பூசிக் கொள்வதில் கைகலப்பு - 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
Published on: 

அமிர்தசரஸில் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கேக் வெட்டும்போது ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு நண்பர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மஜிதா சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாலை 6.45 மணியளவில் தருண்ப்ரீத் சிங் என்பவரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் 20 வயது மதிக்கத்தக்க 20க்கும் அதிகமான இளைஞர்கள் கூடினர். அப்போது கேக் வெட்டி தருணின் முகத்தில் பூசியபோது இளைஞர்களிடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு வந்திருந்த விருந்தினர்களில் ஒருவரான மோனி தில்லன் என்பவர் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து முனிஷ் ஷர்மா மற்றும் விக்ரம் சிங் ஆகிய இரண்டு பேரையும் 5 முறை சுட்டிருக்கிறார். இதில் முனிஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட விக்ரம் அங்கு கொண்டுவருவதற்கு முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இதுகுறித்து மோனி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கின்றனர். மேலும் பிறந்தநாள் பார்ட்டியில் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 5 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com