250 மதுபாட்டில்களை கடத்திய வந்த காவலர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே 250 மதுபானபாட்டில்களை கடத்தி வந்த 2 காவலர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 2 காவலர்கள் உள்ளிட்ட 4 பேர், 250 மதுபாட்டில்களை காரில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது அவ்வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், 4 பேரும் வந்த காரை மறித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 250 மதுபாட்டில்கள் காரில் கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட 2 காவலர்கள் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அந்த இரு காவலர்கள் சிவகங்கை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும், மற்ற இருவர் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.