சிறுவன் பாலியல் வன்கொடுமை, கொலை: 2 இளைஞர்களுக்கு 75 ஆண்டுகள் சிறை

சிறுவன் பாலியல் வன்கொடுமை, கொலை: 2 இளைஞர்களுக்கு 75 ஆண்டுகள் சிறை

சிறுவன் பாலியல் வன்கொடுமை, கொலை: 2 இளைஞர்களுக்கு 75 ஆண்டுகள் சிறை
Published on

பாகிஸ்தானில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இளைஞர்களுக்கு 75 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் லாகூரிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாஹிவால் கிராமத்தில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை அதே கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பு படிக்கும் 2 இளைஞர்கள் கடத்திச் சென்று கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்துள்ளனர்.

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின் படி, சாஹிவால் கிராமத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் படிக்கும் இரு இளைஞர்கள், கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவனை கடத்திச் சென்று, கிராமத்திற்கு ஒதுக்குப்புறமான இடத்தை வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர் என்று கூறுகிறது.

முன்னதாக காவல்துறை, இச்சம்பவம் குறித்து கொலை, கடத்தல் மற்றும் இயற்கைக்கு மாறான குற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, காவல்துறை தீவிரவாத பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் இருவரும் தவறை ஒப்புக் கொண்ட காரணத்தால், அவர்களுக்கு நீதிபதி 75 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 4 லட்சம் ரூபாய் அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com