விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2 இந்திய மாணவர்கள்! அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் அமெரிக்கா, கனெக்டிகட் உள்ள விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனெக்டிகட்
கனெக்டிகட்முகநூல்

இந்தியாவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெங்கானா மாநிலத்தில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தைச் (Wanaparthy district) சேர்ந்தவர் தினேஷ்(22) மற்றும் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் (Srikakulam district) மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிகேஷ் (21) .

தினேஷ் கடந்த ஆண்டு சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பி.டெக் பட்டம் முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் (Connecticut) தலைநகர் ஹார்ட்போட்ரிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து நிகேஷ் என்பவரும் அங்கு படிப்பதற்காக சென்றுள்ளார்.

இருவரும் ஒரே விடுதி அறையில் சந்திக்கவே இவர்களின் தாய்மொழியான தெலுங்கும், இந்தியர்கள் என்ற உணர்வும் நட்பு கொள்ள ஒரு காரணியாக அமைந்துள்ளது. நல்ல நண்பர்களான இருவரும் தங்களது படிப்பை அமெரிக்காவில் தொடர்ந்த நிலையில் திடீரென அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் தங்களது விடுதி அறையில் இறந்துகிடக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இவர்களின் இறப்பிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ’இறந்த தனது மகனின் உடலை தெலுங்கானவிற்கு கொண்டுவர உதவ வேண்டும்’ என்று தினேஷின் பெற்றோர்கள் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கும் , தெலுங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கனெக்டிகட்
திண்டுக்கல்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சித்த இளைஞர் சிக்கியது எப்படி? நடந்தது என்ன?

இதுகுறித்து தினேஷின் மாமா சாய்நாத் கூறுகையில், “தகவலின்படி, இருவரும் தங்களுடைய இரவு உணவை முடித்துவிட்டு உறங்குவதற்காக சனிக்கிழமை இரவு அறைக்கு சென்றுள்ளனர். மறுநாள் காலை அவர்களது நண்பர்கள் இருவரை எழுப்ப முயற்சித்துள்ளனர் (அவர்கள் தாளிட்டு உள்ளே தூங்கினர்). ஆனால், அவர்களிடம் இருந்து எவ்வித சமிக்கையும் இல்லை.

அதனையடுத்து நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ள சென்று பார்த்தபோது இருவரும் இறந்த நிலையில், கிடந்தது தெரியவந்தது. உடனடியாக இருவரது சடலங்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்” என்றார்.

ஆனால் நிகேஷின் குடும்பம் பற்றி விவரங்கள் இன்னும் தெளிவாக கிடைக்கப்பெறவில்லை. ஸ்ரீகாக்குளம் மாவட்ட நிர்வாகத்திற்கும் நிகேஷ் பற்றிய தகவல் தெரியவில்லை. அத்துடன் நிகேஷ் குடும்பத்தினர் இடம் இருந்தும் எதுவும் இதுவரை தகவல் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரின் மர்மமான இறப்புகுறித்த காரணங்கள் என்ன என்பதை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் இருவரின் காரணம் அறியா இறப்பு, இரு மாநிலங்களிலும் பெரும் சோகத்தினையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com