சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர் உட்பட 2 பேர் கைது

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர் உட்பட 2 பேர் கைது
சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர் உட்பட 2 பேர் கைது

அடையாறு மற்றும் புனித தோமையர் மலை பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைதுசெய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், இன்று அடையாறு இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையம் அருகில் கண்காணித்து. அங்கு சந்தேகப்படும்படி இருந்த நபர்களை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் அவர்களை சோதனை செய்த்தில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பின், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுஷாந்த் பதான் மற்றும் சென்னை வர்த்தக மையம் அருகே கஞ்சா கடத்தி வந்த சுப்பிரமணி ஆகியோரை கைதுசெய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன்பின் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com