புற்றுநோய் மருந்து விற்பனை: பணமோசடி செய்த இருவர் கைது

புற்றுநோய் மருந்து விற்பனை: பணமோசடி செய்த இருவர் கைது

புற்றுநோய் மருந்து விற்பனை: பணமோசடி செய்த இருவர் கைது
Published on

புற்றுநோய்க்கான மருந்து விற்பனை தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பலரிடம் 3 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சபீர் அகமது மற்றும் தியாகராஜன் ஆகிய இருவரும் புற்றுநோய்க்கான மருந்து விற்பனையில் தாங்கள் ஈடுபடுவதாகவும், இந்தத் தொழிலில் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி பலரிடம் பணம் பெற்றிருக்கின்றனர்.

இதை நம்பிய வண்ணாரப்பேட்டையச் சேர்ந்த ஹாஜா மொய்தீனிடம் 18 லட்சம் ரூபாய் பெற்று, 11.5 லட்சம் ரூபாயை திரும்பக் கொடுத்திருக்கின்றனர். அதேபோல், ஜாகிர் உசேனிடம் 24 லட்சம் ரூபாய் பெற்றிருக்கின்றனர். ஆனால் சொன்னபடி சபீரும், தியாகராஜனும் நடக்காத நிலையில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com