கோவை விமான நிலையத்தில் வருவாய் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த திருவாரூரைச் சேர்ந்த தீபா மற்றும் கடலூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரிடம் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் அவர்கள் இருவரும் மலக்குடல் மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.