17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக இருவர் போக்சோவில் கைது

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக இருவர் போக்சோவில் கைது

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக இருவர் போக்சோவில் கைது
Published on

மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை கீழத்தெருவை சேர்ந்தவர் கோபு (45). இவர் அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் திருவாலங்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (28) என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே சிறுமியை திருமணத்திற்காக பெண் கேட்டுள்ளார். பெண் கொடுக்க சிறுமியின் பெற்றோர் மறுத்து விட்டனர். அவரும் சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்து அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அச்சிறுமிக்கு உடல்நிலை சரி இல்லாமல்போக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கே அச்சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோபு(45), ரமேஷ் (28) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com