வாசலில் நின்ற குழந்தை கடத்தல்: 6 மணி நேரத்தில் மீட்டது போலீஸ்!

வாசலில் நின்ற குழந்தை கடத்தல்: 6 மணி நேரத்தில் மீட்டது போலீஸ்!

வாசலில் நின்ற குழந்தை கடத்தல்: 6 மணி நேரத்தில் மீட்டது போலீஸ்!
Published on

கடை வாசலில் விளையாடிய இரண்டரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது. பின்னர் ஆறு மணி நேரத்தில், போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர்.

குழந்தை கடத்தல் சம்பவம் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. வழக்கம் போல   கடத்தல்காரர்களை கைது செய்வதும் குழந்தைகளை மீட்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இருந்தும் நாடு முழுவதும் குழந்தைக் கடத்தல் அதிகரித்து வருகின்றன. இதற்கு பின்னால் பெரும்
நெட்வொர்க் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மும்பை சாக்கி நாக்கா பகுதியில் கடை ஒன்றின் வாசலில் இரண்டரை வயது பெண்குழந்தை நின்றது. அப்போது அங்கு வந்த ஓர் இளைஞன், அந்தக் குழந்தையை சத்தம் போடாமல் கடத்திச் சென்றான். குழந்தையை காணாமல் திடுக்கிட்ட பெற்றோர், பதறியபடி போலீசில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்து சிசிடிவி கேமராவை கண்காணித்து ஆறு மணி நேரத்தில் போலீசார் குழந்தையை மீட்டனர். கடத்தல்காரன் கைது செய்யப்பட்டான். அவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com