\
புள்ளி பாய் அப்ளிகேஷன் விவகாரத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 18 வயது பெண்!

புள்ளி பாய் அப்ளிகேஷன் விவகாரத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 18 வயது பெண்!

புள்ளி பாய் அப்ளிகேஷன் விவகாரத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 18 வயது பெண்!
Published on: 

இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை மிகவும் மோசமான வகையில் சித்தரித்திருந்த புள்ளி பாய் செயலி விவாகரத்தில் தொடர்புடைய உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு வெறும் 18 வயதுதான் ஆகிறது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

“18 வயதான ஸ்வேதா சிங்கை மும்பை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்” என உத்தராகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த வழக்கில் 21 வயதான பொறியியல் கல்வி பயின்று வரும் மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை டவுன்லோட் செய்து, அதனை இந்த அப்ளிகேஷனில் அப்லோட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com