ஓடும் பஸ்சில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை!

ஓடும் பஸ்சில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை!

ஓடும் பஸ்சில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை!
Published on

ஓடும் பஸ்சில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள போரிவிலி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). காய்கறி விற்று வந்த 17 வயது சாந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி முலுண்ட் ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்து பேசுவது வழக்கமாம். இந்நிலையில் ’என்னை திருமணம் செய்துக்கிறியா?’ என்று கேட்டிருக்கிறார் அந்த இளைஞர். சரி என்றாராம் சாந்தி.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி, தன்னுடன் சும்மா குஜராத்துக்கு வருமாறு அழைத்தார் இளைஞர். சரி என்றார் சாந்தி.  இருவரும் போரிவிலியில் இருந்து தூங்கும் வசதி கொண்ட பேருந்தில் குஜராத் சென்றனர். பின்னர் அங்கிருந்து பஸ்சில் திரும்பியுள்ளனர். வரும் வழியில் பஸ்சில் வைத்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாராம் இளைஞர். 

மும்பை திரும்பியதும் அந்த இளைஞரை காணவில்லை. இதுபற்றி வீட்டில் புகார் சொன்னார், அந்தப் பெண். அவர்கள் போலீசில் புகார் செய்ததை அடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஆனால், அந்த பஸ்சையும் அதன் டிரைவர், கண்டக்டரையும் தேடி வருகிறார்கள் போலீசார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com