காரைக்கால்: சிறுவனை கொலை செய்ததாக மற்றொரு சிறுவன் கைது - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

காரைக்கால் அருகே விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவனை கைது செய்துள்ள போலீசார், அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Police investigation
Police investigationpt desk

செய்தியாளர்: A.அப்துல் அலீம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நிரவி பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மகன் சந்தோஷ் (13) என்ற சிறுவன், நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுவனை காணவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் சிறுவன் கழுத்து அறுப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

Neravy police station
Neravy police stationpt desk

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிரவி போலீசார், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை கொலை செய்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சிறுவனின் உடல் இருந்த வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Police investigation
மகாராஷ்டிரா: கோட்டையை சுற்றிப்பார்க்க சென்ற புதுமணப்பெண் மரணம்; காரணம் என்ன?

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த சிறுவனின் சகோதரியிடம், கொலை செய்த சிறுவன் தவறாக நடந்ததாகக் கூறப்படுகிறது. தன் சகோதரிக்காக தட்டிக் கேட்ட 13 வயது சிறுவனை, 17 வயது சிறுவன் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com