சம்பளம் கேட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்

சம்பளம் கேட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்

சம்பளம் கேட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்
Published on

டெல்லியில் மியான்வாலி நகர் பகுதியிலுள்ள வாய்க்காலில் 16வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அந்தப்பெண்ணை கொலை செய்து மூன்று துண்டுகளாக வெட்டி வாய்க்காலில் வீசியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்குறித்து விசாரித்து வந்தனர். அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களது விசாரணையை தொடங்கினார்.

அந்தச் சிறுமி குறித்து எந்தத் தகவலும் தெரியாததால் இந்த வழக்கு காவல்துறைக்கு சவாலானதாகவே இருந்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரும் கொலை செய்யப்பட்டனாரா? அல்லது வேறு எங்காவது கொலை செய்து சடலத்தை கொண்டு வந்து இந்தப் பகுதியில் வீசியுள்ளனரா என காவல்துறையினர் சந்தேகித்தனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பெண்கள் யாரவது காணாமல் போனதாக புகார் உள்ளதா என்பதை எல்லாம் ஆராய்ந்தனர்.

அப்பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்கண்டை சேர்ந்த ஒருவர் இந்தப்பகுதியில் வசித்து வந்ததாகவும் அவர் கடந்த சில நாட்களாக காணவில்லை என்ற தகவல் காவல்துறைக்கு கிடைத்து. இதனால் அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த நபர் குறித்த விவரங்களை சேகரித்தனர். ஜார்கண்டை சேர்ந்த மன்ஜீத்தை அவரது கிராமத்திற்கு சென்று காவல்துறையினர் தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனையடுத்து அந்த நபரை டெல்லியில் வைத்து காவல்துறையினர்  கைது செய்தனர்.

சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். சிறுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அந்தப் பெண் ஜார்கண்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில்   “ஜார்கண்டை சேர்ந்த சிறுமி வறுமையின் காரணமாக வாழ்வாதாரத்திற்கே போராடி வந்துள்ளார். இந்நிலையில் மன்ஜீத் அவரை டெல்லிக்கு அழைத்து வந்து வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதன்படி ஓரிடத்தில் பணியில் சேர்த்து விட்டுள்ளார். மன்ஜீத் அந்தப் பெண்ணின் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அவருக்கு திருப்பி தராமல் வந்துள்ளார். இந்நிலையில் பணியை விட்ட அந்தச் சிறுமி தனது சம்பளத்தை திருப்பித்தரக்கோரி மன்ஜீத்திடம் முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர் தனது கூட்டாளிகளுடன் அந்தச் சிறுமியை கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு ஒரு பெண்ணும் உடந்தை. அந்தப்பெண்ணின் உடலை மூன்று துண்டுகளாக வெட்டி அப்பகுதியில் உள்ள கால்வாயில் வீசியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com