சென்னை: 3 கடையின் பூட்டை உடைத்து 1,50,000 பணம் கொள்ளை

சென்னை: 3 கடையின் பூட்டை உடைத்து 1,50,000 பணம் கொள்ளை

சென்னை: 3 கடையின் பூட்டை உடைத்து 1,50,000 பணம் கொள்ளை
Published on

சென்னை கோயம்பேட்டில் அடுத்தடுத்து மூன்று கடையின் பூட்டை உடைத்து ரூ. 1,50,000 கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் வசிப்பவர் குமார். இவர் கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் லட்சுமி பவர் டூல்ஸ் என்ற பெயரில் கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று மர்ம நபர்கள் இவருடைய கடையின் பூட்டை உடைத்து கல்லாபெட்டியில் இருந்த ரூ.1,45,000 பணத்தை கொள்ளையடித்து விட்டு பக்கத்தில் உள்ள இண்டு கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 5,000 ஆயிரம் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து குமார் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து அங்கு பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சியில் கொள்ளையன் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் பழைய குற்றவாளிகளின் படத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com