வேலை வாங்கி தருவதாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது

வேலை வாங்கி தருவதாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது

வேலை வாங்கி தருவதாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது
Published on

சென்னையில் இருந்து வேலை வாங்கித்தருவதாக அழைத்துச்செல்லப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளியின் மகளான 15 வயது சிறுமியை, வேலை வாங்கித்தருவதாக சித்ரா என்ற பெண் ஆரணிக்கு அழைத்துச் சென்றுள்ளார். குடும்பத்துடன் நெருக்கமாக பழகிய பெண் என்று நம்பி அவருடன் சிறுமி சென்றார். துணிக்கடையில் வேலை வாங்கித்தருவதாக கூறிய அந்த பெண்மணி, மயக்கமருந்து அளித்து சிறுமியை தொடர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்க உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உறவினர் ஒருவரின் உதவியுடன் தப்பி வந்த சிறுமி தாயிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து அரசு டாக்டரான ஜெயப்பிரகாஷ், ஆரணியைச் சேர்ந்த சித்ரா, அவரது கணவர் சுரேஷ் மற்றும் கோட்டீஸ்வரி ஆகியோர் மீது திருமங்கலம் ‌அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து  4 பேரையும் கைது செய்தனர்.  ஆனால், தன் மீதான புகாரை டாக்டர் ஜெயப்பிரகாஷ் மறுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com