\
உ.பி: பாலியல் துன்புறுத்தலால் தீவைத்துக்கொண்ட 15 வயது பெண்

உ.பி: பாலியல் துன்புறுத்தலால் தீவைத்துக்கொண்ட 15 வயது பெண்

உ.பி: பாலியல் துன்புறுத்தலால் தீவைத்துக்கொண்ட 15 வயது பெண்
Published on: 

உத்தரபிரதேச கிராமத்தில் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 15 வயது பெண் மண்ணெண்ணெய் ஊற்றி  தீவைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்புர் மாவட்டத்திலுள்ள ஓர் கிராமத்தில் 15 வயது சிறுமியை 16 வயது சிறுவன் நேற்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். இதுதெரிந்த சிறுமியின் குடும்பத்தார் சிறுவனை கண்டித்துள்ளனர். ஆனால் அதுபற்றி போலீஸாரிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை.

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி இன்று காலை 8 மணியளவில் தனது வீட்டிலிருந்து மண்ணெண்ணெயை எடுத்து தன்மீது  ஊற்றி  தீவைத்துக்கொண்டார். சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கான்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.

சிறுமியின் பெற்றோர் ஹமிர்புர் சூப்பரண்ட் நரேந்திர குமார் சிங்கிடம் இதுகுறித்து புகார் கொடுத்தனர். அந்த புகாரில் இதற்கு முன்பே அந்த சிறுவன் தங்கள் மகளிடம் பலமுறை தவறாக நடந்துகொண்டதாகவும், இந்தமுறை அந்த சிறுவனை தாங்கள் கண்டித்ததாகவும் கூறியிருக்கின்றனர். மேலும் இதனால் மனமுடைந்த சிறுமி  தீவைத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ள போலீஸார், அதை மாஜிஸ்திரேட் முன்பு சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com