\
சட்ட விரோத மது விற்பனை: 145 மது பாட்டில்கள் பறிமுதல்

சட்ட விரோத மது விற்பனை: 145 மது பாட்டில்கள் பறிமுதல்

சட்ட விரோத மது விற்பனை: 145 மது பாட்டில்கள் பறிமுதல்
Published on

தேனி மாவட்டம் போடி அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடி மேலச்சொக்கநாதபுரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போடி தாலூகா காவல்துறை சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கெப்பணகவுண்டர் மகன் சுப்பிரமணியை கைது செய்து 145 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com