\
உத்தரகாண்ட்:  14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தரகாண்ட்: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தரகாண்ட்: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை
Published on: 

உத்தரகாண்டில் கடத்தப்பட்டு, 3 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 14 வயது சிறுமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்த 14 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அங்கேயே விட்டுச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த துணை ஆய்வாளர் பிரவீன் ஹையான்கி, ’’சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டதை அறிந்த 3 பேர் புதன்கிழமை மாலையே யாருக்கும் தெரியாமல் அவரை அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு மூவரும் அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன், யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டிச் சென்றுள்ளனர்.

சுயநினைவு இழந்த நிலையில் சிறுமி காட்டுப்பகுதியில் கிடப்பதைப் பார்த்த கிராமத்தினர், சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்கிருந்து அவரை மீட்ட பெற்றோர் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், மேல்சிகிச்சைக்கு ஹல்திவானியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்’ என தெரிவித்தார்.

மேலும் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com