\
மலேசியாவுக்கு கடத்த இருந்த 1364 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

மலேசியாவுக்கு கடத்த இருந்த 1364 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

மலேசியாவுக்கு கடத்த இருந்த 1364 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
Published on

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த இருந்த 1364 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை வெளியிட்டுள்ள ட்வீட்டில், "சென்னை விமான நிலைய சுங்கத்துறை மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யவிருந்த சரக்குகளில் இருந்து அழிந்து வரும் உயிரினங்களான 1364 நட்சத்திர ஆமைகளை கைப்பற்றியது.

அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் (CITES) மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 இன் கீழ் இந்த நட்சத்திர ஆமைகள் கைப்பற்றப்பட்டு தமிழ்நாடு மாநில வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com