கடலூர்| 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 2 பேர் கைது!
கடலூரில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கொடூரச் செயலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 2 பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடலூரைச் சார்ந்த கார்த்தி (20) மற்றும் குருமூர்த்தி(21). இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் சென்று தனியாக பேச வேண்டும் என அவரை அழைத்து காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வாலிபர்கள் இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், சிறுமி கதறி அழுதுள்ளார். சிறுமியை ஏமாற்றி பாலாத்காரம் செய்த இருவரும் தப்பி சென்றுள்ளனர்.
இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், கார்த்தி, குருமூர்த்தி ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதே, நவம்பர் மாதம் 2-ஆம் தேதி கோவையில் 21 வயது கல்லூரி மாணவி 3 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியிருந்த நிலையில், மீண்டுமொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் இன்று நடந்திருக்கிறது.

