\
12-ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை: வாலிபர் கைது

12-ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை: வாலிபர் கைது

12-ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை: வாலிபர் கைது
Published on

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே +2 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியை அடுத்த ஒந்திமலையை சேர்ந்த வாலிபர் பரதன். இவர் கீழ்குயில்குடி கிராமத்தை சேர்ந்த +2 மாணவியை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து, வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பரதன் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பரதன் மாணவியை கடத்தி மதுரை பைக்கரா பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் அடைத்து வைத்திருந்ததும் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் பரதனை போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com