\
12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: 53 வயது தையல்காரர் கைது!

12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: 53 வயது தையல்காரர் கைது!

12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: 53 வயது தையல்காரர் கைது!
Published on

புதுச்சேரியைச் சேர்ந்த 53 வயது முதியவர்  ஒருவர் 12 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ராதாபுரத்தைச் சேர்ந்த 53 வயது முதியவர் ஒருவர் தையல்கடை நடத்தி வந்துள்ளார். வாடிக்கையாளர்களை சந்திக்க அருகிலுள்ள ஜவுளிக்கடைக்கு, அவர் அடிக்கடி செல்வது வழக்கம். அப்படித்தான், கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி 12 வது சிறுமி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஷாப்பிங் செய்ய வந்துள்ளார்.

அப்போது, சிறுமியை தையல்காரர் தனிப்பட்ட பகுதிகளை தொட்டு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனை தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்து கதறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில்  தையல்காரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளனர் போலீஸார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com