குற்றம்
தனியாக வந்த பெண்ணிடம் 11 சவரன் தாலி சங்கிலி பறிப்பு
தனியாக வந்த பெண்ணிடம் 11 சவரன் தாலி சங்கிலி பறிப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 11 சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
ஜேஜே நகரைச் சேர்ந்த வாணி, கண்டிகைப் பகுதியில் நடந்த வாரச் சந்தைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் வாணியின் கழுத்திலிருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர்.
தங்க சங்கிலியை வேகமாக இழுத்ததில் வாணி கீழே விழுந்து சிறிது தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார். அதில் படுகாயமடைந்த வாணி திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய வழிப்பறி கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.