பிரான்மலையில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆய்வுக்கு சென்றவர்கள் கைது!
சிவங்கை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரான்மலையில் கல்குவாரி அமைத்து சூறையாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு செய்வதற்காக சென்ற 100க்கும் மேற்பட்ட பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி பேசிய பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கர்ணன் “ இன்று பிரான்மலையை ஆய்வு செய்வதற்காக பல்வேறு இயக்கங்கள், கட்சிகளை சேர்ந்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 'பறம்புமலை பாதுகாப்பு இயக்கம்' குழுவினர் பிரான்மலைக்கு சென்றோம். மலைக்கு செல்லும் வழியில் சிங்கம்புணரி மற்றும் எஸ்.வி. மங்கலம் காவல்துறையினர் எங்களை கைது செய்து உடும்பன்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்” என்றார்
பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த இளஞ்சென்னியன், முத்துப்பாண்டி மற்றும் நாம் தமிழர் கட்சியின் அருணகிரி சிறீதரண் உள்ளிட்ட பலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

