தாயின் கண்முன்னே மண்வெட்டியால் தாக்கப்பட்ட மகன்: கொடூரங்களை அரங்கேற்றிய ஆசிரியர்!

தாயின் கண்முன்னே மண்வெட்டியால் தாக்கப்பட்ட மகன்: கொடூரங்களை அரங்கேற்றிய ஆசிரியர்!
தாயின் கண்முன்னே மண்வெட்டியால் தாக்கப்பட்ட மகன்: கொடூரங்களை அரங்கேற்றிய ஆசிரியர்!

கர்நாடகாவில் 4ஆம் வகுப்பு மாணவனை மண்வெட்டியைக்கொண்டு அடித்து தாக்கிய ஆசிரியர், முதல் மாடியிலிருந்து மாணவனை கீழே தூக்கிவீசப்பட்டதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். காப்பாற்றச் சென்ற தாயையும் மண்வெட்டியால் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். 

கடாக் மாவட்டத்தின் நாராகுண்ட் தாலுக்காவிற்கு உட்பட்ட ஹத்லி கிராமத்தில் அரசு நடத்தும் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. அந்த பள்ளியில் முத்தப்பா ஹதகலி(45) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் முதல்மாடியிலுள்ள 4ஆம் வகுப்புக்கு சென்ற அவர், பரத் என்ற மாணவனை மண்வெட்டியைக்கொண்டு அடித்து தாக்கியுள்ளார். சிறுவனின் தாயார் கீதா பார்கரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். 

தனது மகனை அடிப்பதைப் பார்த்த தாயார் கீதா ஓடிவந்து தடுக்க முற்பட்டுள்ளார். அவரையும் மண்வெட்டியால் அடித்து தாக்கிய முத்தப்பா, கொடூரமாக சிறுவனை முதல்மாடியிலிருந்து தூக்கி கீழே வீசியுள்ளார். அதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பலத்த காயமடைந்த சிறுவனின் தாயார் கீதா மற்றும் தடுக்க முயன்ற மற்றொரு ஆசிரியரான நாங்கன்கவுடா பாட்டீல் ஆகியோர் காயங்களுடன் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதனிடையே முத்தப்பா அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் சிவ்பிரகாஷ் தேவராஜு பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ”முத்தப்பா அந்த பள்ளியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். முதலில் சிறுவனை பள்ளி வளாகத்தில் முதல் மாடியில் வைத்து அடித்து தாக்கியதுடன், மேலேயிருந்து தூக்கி வீசியுள்ளார். இதனால் சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும், முத்தப்பா சிறுவனின் தாயையும் மண்வெட்டியால் அடித்து தாக்கியுள்ளார். சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய முத்தப்பாவை கண்டுபிடித்து கைதுசெய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்திய சட்டப்பிரிவு 302-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறுவனை ஏன் அடித்து கொடூரமாக தாக்கினார் என்பதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. ஆனால் ஏற்கனெவே இவர்களுக்கிடையே குடும்ப பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com