ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி
டெல்லியில் 10 வயது சிறுமியை அவரது உறவினரே ஒரு வருடம் பாலியல் வன்கொடுமை செய்துவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 10 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி கடந்த ஒரு வருடமாக அவரது உறவினரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாகச் சொல்லி கடந்த ஒரு வருடமாக மிரட்டி வந்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும்போது சிறுமியை மிரட்டி அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த மாதம் அவர் தன் குடும்பத்தினரை பார்க்க தன் ஊருக்குச் சென்றபோது, அந்த உறவினர் தன்னிடம் தவறாக நடந்தது பற்றி சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.
விசாரணை முடிந்து போலீஸ் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறும்போது, புகார் வந்ததன் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்து வந்தோம். முதலில் நான் அப்படி நடந்து கொள்ளவில்லை என்று சமாளித்து வந்தவர் பிறகு செய்த தவறை ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்தார்.