10 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது
10 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைதுpt desk

ஆந்திரா டூ ஆவடி | பேருந்தில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்து விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: எழில்

ஆவடி காவல் ஆணையருக்கு உட்பட்ட செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் வந்த நபர் ஒருவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், 2 பண்டல்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

கைது
கைதுகோப்புப்படம்

இதனையடுத்து அவரை செங்குன்றம் மதுவிலக்குப் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டத்தைச சேர்ந்த விக்னேஷ் (29) என்பதும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சூலூர்பேட்டை வரை வந்து அங்கிருந்து பேருந்து மார்க்கமாக சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

10 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு... முன்னாள் டிஜிபி ரவி தெளிவான விளக்கம்

இந்நிலையில் அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள போலீசார், விக்னேஷ் என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com