சிங்கப்பூர் டூ கோவை: விமானத்தில் கடத்திவரப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியிடமிருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Gold seized
Gold seizedfile

செய்தியாளர்: சுதீஷ்

கோவையில் இருந்து நாள்தோறும் சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அச்சேவையை பயன்படுத்தும் பயணிகளிடம், ‘சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்கள் தொடர்பான சோதனை’ தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. அப்படி நேற்றும் கோவை விமான நிலைய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை பன்னாட்டு விமான நிலையம்
கோவை பன்னாட்டு விமான நிலையம்கோப்புப்படம்

அப்போது, பயணி ஒருவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து ரூ.73,80,000 மதிப்புள்ள 1 கிலோ எடையுள்ள தங்கக் கட்டியை கைப்பற்றினர். இதையடுத்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அப்பயணி சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் விமானம் மூலம் வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

Gold seized
சென்னை: ஏ.டி.எம் இயந்திரத்தில் நூதன திருட்டு – வடமாநில சிறுவன் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com