\
தசரா ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் பலி; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தசரா ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் பலி; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தசரா ஊர்வலத்தின்போது ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் பலி; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு ஊர்வலமாகச் சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ஜாஷ்பூர் என்ற இடத்தில் தசரா பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்காக பக்தர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக சென்ற கார், ஊர்வலமாக சென்றவர்கள் மீது மோதியது. இதில், 21 வயதேயான கவுரவ் அகர்வால் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவரன்றி விபத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த இரண்டுபேரை சத்தீஸ்கர் காவல்துறையினர் கைது செய்தனர். விபத்தில் உயிரிழந்தவருக்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com