விருதுநகர்: பள்ளிக்கூடம் நடத்த அனுமதி பெற்றுத்தருவதாகக் கூறி 1.50 கோடி மோசடி

விருதுநகர்: பள்ளிக்கூடம் நடத்த அனுமதி பெற்றுத்தருவதாகக் கூறி 1.50 கோடி மோசடி
விருதுநகர்: பள்ளிக்கூடம் நடத்த அனுமதி பெற்றுத்தருவதாகக் கூறி 1.50 கோடி மோசடி

பள்ளிக்கூடம் நடத்துவதற்கு உரிமம் பெற்றுத் தருவதாகக்கூறி ஒரு கோடி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் பாண்டிய நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது நண்பர் விருதுநகர் செந்தி விநாயகபுரத்தை சேர்ந்த ஜோசப் சிங்கராஜ். இவர்கள் இருவருக்கும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கீழராஜகுலராமன் கிராமத்தைச் சார்ந்த பொன் ஆனந்த் மற்றும் அவரது மனைவி சாந்தி இருவரும் நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமாகியுள்ளனர். அவர்கள் பள்ளிக்கூடம் நடத்துவதற்கு அசோக்குமார் மற்றும் ஜோசப் சிங்கராஜ்க்கு அனுமதி பெற்றுத்தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய இருவரும் பல தவணையாக ரூபாய் 1 கோடி 50 லட்சத்தை பொன் ஆனந்தராஜ் மற்றும் அவரது மனைவியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

கொடுத்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை பொன் ஆனந்த எந்தவித உரிமமும் பெற்று தரவில்லை. இதனால் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்கு, பொன் ஆனந்த, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் அஜய் ஆகியோர் பணத்தை திருப்பித் தரமுடியாது எனக் கூறி மிரட்டியுள்ளனர். பணத்தை திருப்பி கேட்டால் குடும்பத்துடன் கொலைசெய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட ஜோசப் சிங்கராஜ் மற்றும் அசோக்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com