“என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” -ஆடியோ அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி விபரீத முடிவு

“என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” -ஆடியோ அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி விபரீத முடிவு

“என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” -ஆடியோ அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி விபரீத முடிவு
Published on

“என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” என்று வாட்சப்பில் தன் அக்காவிற்கு ஆடியோ அனுப்பிவிட்டு திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் 4 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை வேளச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் 25 வயதான இந்துமதி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரை சேர்ந்த 37 வயதான குமரன் என்பவரை பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில் திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன நாள் முதலே இந்திமதியை அவரது மாமியார் சாந்தி, “ராசியில்லாதவள். நீ அதிகம் படிக்கவில்லை. குறைவாக சாப்பிடு” என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மாமியாரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக இந்துமதி வேளச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். திருமணம் ஆகி 5 மாதம் ஆன நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த இந்துமதியை சமாதானம் செய்து அழைத்து செல்லக்கூட கணவர் குமரன் வராமல் இருந்துள்ளார். இதனால் கணவரும் தாய் பேச்சை கேட்டுக் கொண்டு தம்மை கண்டு கொள்வதில்லையே என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்துமதி.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது அக்காவிற்கு வாட்சாப் மூலம் அனுப்பிய ஆடியோ ஒன்றில் “என் சாவுக்கு குமரன் அம்மா தான் காரணம் நானும் பாப்பாவும் செல்கிறோம்” என்று அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அவரது அக்கா பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து பார்ப்பதற்குள் இந்துமதி இறந்துவிட்டார். தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார் உடலை மீட்டு இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து திருமணம் ஆகி 5 மாதமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com