\
'வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன்'-பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி டாக்டர்

'வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன்'-பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி டாக்டர்

'வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன்'-பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி டாக்டர்
Published on

வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என மிரட்டி சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகன் ராபின்சன், விளாத்திகுளத்தில் 'பத்மநாபன் ஆஸ்பத்திரி" எனும் பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனைக்கு விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த 23வயது இளம்பெண் (லாவண்யா) தனது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நேற்று மதியம் சென்றுள்ளார்.

அப்போது அந்த இளம் பெண்ணிடம் மருத்துவர் ராபின்சன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என்று அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் நடந்தவற்றை பெண்மணி தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ராபின்சன் மீது அளித்த புகாரின் பேரில் போலீசார், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 மற்றும் 506(ii)உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராபின்சன் சித்த மருத்துவ முறையில் பயிற்சி பெற்று விட்டு, ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மாத்திரை வழங்கி சிகிச்சை அளித்த காரணத்திற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு போலி மருத்துவர் என்று கைது செய்யப்பட்டு அந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com