\
பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்துவிட்டு வந்த 24 வயது வாலிபர் கொரோனாவால் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்துவிட்டு வந்த 24 வயது வாலிபர் கொரோனாவால் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்துவிட்டு வந்த 24 வயது வாலிபர் கொரோனாவால் உயிரிழப்பு
Published on

பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்துவிட்டு வந்த 24 வயது வாலிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்து விட்டு கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்திற்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 5-ம் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பிரச்னை இருந்துள்ளது.

இதனால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் அதிக உடல் எடை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து முடித்து விட்டு வந்தவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com