'அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத் திறன் குறையக் கூடும்' - WHO

'அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத் திறன் குறையக் கூடும்' - WHO
'அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத் திறன் குறையக் கூடும்' - WHO

கொரோனா வைரஸ் உருமாற்றத்தில் ஒமைக்ரான் கடைசியாக இருக்காது என்றும் அடுத்த திரிபு தீவிரத் தொற்றுத் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் வெளியிட்டுள்ள தகவலில், இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடர வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் கடைசியாக இருக்காது என்ற அவர், மேலும் சில திரிபுகள் மக்களைத் தாக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

கொரோனாவின் அடுத்த திரிபு, ஒமைக்ரானைவிட வேகமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என்ற மரியா, அதற்குப் பிறகும் சில திரிபுகள் ஏற்படக்கூடும் என்றார். அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத் திறன் குறையக் கூடும் என்ற அவர், எனினும், நோய்த் தொற்று ஆபத்தையும் உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும் என்றார்.

இதையும் படிக்க: வலுக்கும் ஹிஜாப் பிரச்னை... தமிழகத் தலைவர்களின் கண்டனக் குரல்! #PTDigitalExclusive

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com