\
”3 முறை தடுப்பூசி செலுத்திய பிறகும் முகக் கவசம் எதற்கு?” - வாக்குவாதம் செய்த டி.எஸ்.பி!

”3 முறை தடுப்பூசி செலுத்திய பிறகும் முகக் கவசம் எதற்கு?” - வாக்குவாதம் செய்த டி.எஸ்.பி!

”3 முறை தடுப்பூசி செலுத்திய பிறகும் முகக் கவசம் எதற்கு?” - வாக்குவாதம் செய்த டி.எஸ்.பி!
Published on

மூன்று முறை தடுப்பூசி செலுத்திய பிறகும் முகக் கவசம் எதற்கு? என கேட்டு டிஎஸ்பி ஒருவரே, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தஞ்சாவூர் போலீஸ் பயிற்சி கல்லூரியில் டி.எஸ்.பி.யாக இருக்கும் சபாபதி என்பவர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். மாற்று உடையில் இருசக்கர வாகனத்தில் சென்ற டி.எஸ்.பி. சபாபதியை, அண்ணா நகரில் மடக்கிய காவல்துறையினர், முகக் கவசம் அணியாததற்கு அபராதம் செலுத்தக் கோரினர்.

அதற்கு 3 முறை தடுப்பூசி செலுத்திய பிறகு முகக் கவசம் எதற்கு என கேட்டு டிஎஸ்பி சபாபதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் டி.எஸ்.பி. என்பதை அறியாத காவலர்கள், அபராத செலான் கொடுக்க முயன்றனர். தொடர்ந்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com