ஒமைக்ரான் அதிவேகமாக பரவ இந்த மூன்றுதான் முக்கிய காரணங்கள்!.. WHO விஞ்ஞானியின் விளக்கம்

ஒமைக்ரான் அதிவேகமாக பரவ இந்த மூன்றுதான் முக்கிய காரணங்கள்!.. WHO விஞ்ஞானியின் விளக்கம்

ஒமைக்ரான் அதிவேகமாக பரவ இந்த மூன்றுதான் முக்கிய காரணங்கள்!.. WHO விஞ்ஞானியின் விளக்கம்
Published on

கடந்த ஒரு வாரத்தில் உலகம் முழுக்க கிட்டதட்ட 10 மில்லியன் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், இதில் ஒமைக்ரான் தொற்றின் முக்கியப் பங்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை தொடர்ந்து, ஒமைக்ரான் வேகமாக பரவ காரணம் என்ன என்பது குறித்தும் தெரிவித்துள்ளது.

அக்காரணங்களை உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வேன் கேர்கோவ் தெரிவித்துள்ளார். அவர் கூறியவற்றின் விவரங்கள்:

முதல் விஷயம் - இந்த ஒமைக்ரான் திரிபு, அதிக பிறழ்வுகளை கொண்டுள்ளது. அதனால் இதற்கு மனிதர்களின் உடலுக்குள் செல்வது எளிதாக இருக்கிறது.

இரண்டாவதாக, இந்த ஒமைக்ரான், மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியிடமிருந்து எளிதில் தப்பிக்கும் தன்மையுள்ளதாக இருக்கிறது. அதனால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கும் இத்தொற்றின் தாக்கம் இருக்கிறது.

அடுத்தபடியாக சுவாசக்குழாயின் மேல் பகுதியில் ஒமைக்ரான் வேகமாக பாதிப்பு ஏற்படுத்தும் தன்மையோடு இருக்கிறது. ஆனால் டெல்டா மற்றும் பிற திரிபுகளெல்லாம் கீழ்ப்பகுதியில் (நுரையீரலில்) பாதிப்பை ஏற்படுத்துவது.

இக்காரணங்களால்தான் ஒமைக்ரான் அதிவேகமாக பலருக்கும் உறுதிசெய்யப்படுகிறது. இப்போதுவரை ஒமைக்ரான் பாதிப்பு டெல்டாவைவிடவும் குறைவான அளவு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஒமைக்ரானும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையோடே இருக்கின்றன.

பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு மாஸ்க் அணிந்துக்கொண்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே இந்தப் பரவலை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எந்தளவுக்கு நாம் பரவலை கட்டுப்படுத்துகிறோமோ, அந்தளவுக்கு நம்மால் சுகாதார சிக்கல்கள் உருவாகாமல் தடுக்க முடியும்” என்று கூறியுள்ளார் தொற்றுநோயியல் நிபுணர் மரியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com