கொரோனாவின் புதிய திரிபான எக்ஸ்இ (XE) வகை வேகமாக பரவ வாய்ப்பு: WHO எச்சரிக்கை

கொரோனாவின் புதிய திரிபான எக்ஸ்இ (XE) வகை வேகமாக பரவ வாய்ப்பு: WHO எச்சரிக்கை
கொரோனாவின் புதிய திரிபான எக்ஸ்இ (XE) வகை வேகமாக பரவ வாய்ப்பு: WHO எச்சரிக்கை

ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட எக்ஸ்இ (XE) எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபானது, பத்து சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்போது வரை, ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு கோவிட்-19 இன் மிகவும் தீவிரமானதாக கருதப்பட்டது. எக்ஸ் இ தொடர்பான இந்த புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கோவிட்-19 வகையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமைக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது, அமெரிக்காவிலும் பெரும்பாலான பிஏ.2 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.



தற்போது கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ (XE) எனும் புதிய மாறுபாடு, ஓமைக்ரானின் BA.1 மற்றும் BA.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பாகும். இது ஜனவரி 19 அன்று இங்கிலாந்தில் முதன்முதலாக கண்டறியப்பட்டது, மேலும் 600 க்கும் குறைவான பாதிப்புகள் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக கருதப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது மக்களிடையே புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com