தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு கூடுதல் தளர்வுகள் என்னென்ன? – விரிவான விவரங்கள்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு கூடுதல் தளர்வுகள் என்னென்ன? – விரிவான விவரங்கள்
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு கூடுதல் தளர்வுகள் என்னென்ன? – விரிவான விவரங்கள்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கொரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளில், கூடுதல் தளர்வுகள்  தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்கள்…

நவம்பர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்துவகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் இனி முழு நேரம் செயல்படலாம்.  கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா தவிர்த்த அனைத்து மாநிலங்களுக்கிடையே 100% சதவீத இருக்கைகளுடன் குளிர்சாதன பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை சுழற்சி முறையில் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனித்து இயங்கும் மதுக்கூடங்கள் உட்பட அனைத்து வகையான மதுக்கூடங்களும் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு பயிற்சி நிலையங்கள் 100 சதவீத பயிற்சிபெறுவோருடன் இயங்கலாம் என்றும், தொலைக்காட்சி மற்றும் சினிமா உட்பட அனைத்து படப்பிடிப்புகளும் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com