\
விஜயகாந்த், பிரேமலதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

விஜயகாந்த், பிரேமலதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

விஜயகாந்த், பிரேமலதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 24 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைத்தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்து விஜயகாந்தும் பிரேமலதாவும் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைக்கு உடல் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால் 2 பேரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com