மாணவர்களின் "மைம்" நிகழ்ச்சிமூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேப்பேரி போலீசார்

மாணவர்களின் "மைம்" நிகழ்ச்சிமூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேப்பேரி போலீசார்
மாணவர்களின் "மைம்" நிகழ்ச்சிமூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேப்பேரி போலீசார்

மாணவர்களின் "மைம்" நிகழ்ச்சி மூலம் சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீசார் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சென்னை முக்கிய வணிகப் பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. கொரோனா இன்னும் முடிவுக்கு வராததால் பண்டிகைக் காலங்களில் மிகவும் கவனமுடன் இருக்கும்படி தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் சென்னை காவல்துறை புத்தாடைகள் வாங்கவரும் பொதுமக்களிடம் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பும், அதில் இருந்து தங்களை தற்காத்து கொள்வது குறித்தும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சென்னை புரசைவாக்கம் வெல்கம் ஓட்டல் சிக்னல் பகுதியில் வேப்பேரி போக்குவரத்து போலீசார் சார்பில் இன்று மாலை கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குறிப்பாக கல்லூரி மாணவ- மாணவிகளின் கொரோனா விழிப்புணர்வு "மைம்" நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், முகக் கவசம் அணிவதன் அவசியம், தனிமனித இடைவெளியின் அவசியம், தடுப்பூசியின் அவசியம் குறித்து "மைம்" மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் கீழ்ப்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து புரசைவாக்கம் பகுதிக்கு வரும் மக்களுக்கு முகக் கவசங்களை வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com