கொரோனா வைரஸ்
திருப்பூருக்கு ரயிலில் வரும் வடமாநிலத்தவருக்கு தடுப்பூசி - மாநகராட்சி ஆணையர்
திருப்பூருக்கு ரயிலில் வரும் வடமாநிலத்தவருக்கு தடுப்பூசி - மாநகராட்சி ஆணையர்
மூன்றாவது அலை துவங்குவதற்கு முன்பாகவே 100% தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநகராட்சி என்ற இலக்கைக் கொண்டு செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை நகராட்சி ஆணையர் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் , ரயில் மூலம் திருப்பூருக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு தான் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார். ரயில் மூலம் திருப்பூர் வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ரயில்நிலையத்திலேயே தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.