உத்தரகாண்ட் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி
உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதன் காரணமாக முதல்வர் தலைமையில் இன்று நடைபெறவிருந்த அரசின் அலுவல் ஆய்வுக்கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆகஸ்டு 25 ஆம் தேதி முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் உதவியாளருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்,முதல்வர் மூன்று நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தார்.
உத்தரகாண்டில் இதுவரை 19 ஆயிரத்து 827 பேர் கோரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர், அவர்களில் 13,650 பேர் குணமடைந்துள்ளனர். இந்த மாநிலத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 269 பேர். இந்தியாவில் இதுவரை 37 இலட்சத்து 69 ஆயிரத்து 523 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 29 இலட்சத்து ஆயிரத்து 908 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 66 ஆயிரத்து 333 பேர்.