\
தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு !
Published on

தமிழகத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜயபாஸ்கர் " கொரோனா வைரஸால் 2 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதில் ஒருவர் கலிபோர்னியாவில் இருந்து வந்த பெண் வயது 64. அவரை ஸ்டான்லி மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் 43 வயதான ஆண், அவர் துபாயில் இருந்து வந்தவர். அவருக்கு திருநெல்வேலி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இருவரின் உடடல் நிலையும் சீராக இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 370 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி இன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com