\
வேலூரில் கொரோனாவுக்கு அதிகரிக்கும் உயிரிழப்பு

வேலூரில் கொரோனாவுக்கு அதிகரிக்கும் உயிரிழப்பு

வேலூரில் கொரோனாவுக்கு அதிகரிக்கும் உயிரிழப்பு
Published on

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு கண்டுள்ளது.

வேலூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்துவாச்சாரியை சேர்ந்த 73 வயது முதியவர், சங்கரன்பாளையத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஆகிய இருவர் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு கண்டுள்ளது.

மேலும் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1530 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் 410 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 2828 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com