மேற்குவங்கம்: கொரோனா பாதித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணம்.

மேற்குவங்கம்: கொரோனா பாதித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணம்.

மேற்குவங்கம்: கொரோனா பாதித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணம்.
Published on

மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சம்ரேஷ் தாஸ் கோரோனா பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்தார்.

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்திலுள்ள எக்ரா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சம்ரேஷ் தாஸுக்கு வயது 76. கடந்த மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த இவரின் உடல்நிலை ஜூலை 24இல் மோசமடைந்தது. அதன்பிறகு செயற்கைசுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று காலை மரணமடைந்தார். இவரின் மரணத்துக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஜூன் மாதம் திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு எம்.எல்.ஏ தாமனோஷ் கோஷ் கோரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com