‘இரவு 10 மணி வரை தடுப்பூசி மையங்கள் செயல்படலாம்’- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

‘இரவு 10 மணி வரை தடுப்பூசி மையங்கள் செயல்படலாம்’- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
‘இரவு 10 மணி வரை தடுப்பூசி மையங்கள் செயல்படலாம்’- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தேவைப்பட்டால் இரவு 10 மணி வரை நீட்டிக்கலாம் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக 151 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் 60 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு கூடுதல் தடுப்பூசி எனும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 18 வயதைக் கடந்தவர்கள் மற்றும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி மையங்களில் கூட்டம் என்பது அதிக அளவில் காணப்படுகிறது. இதனையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கூடுதல் செயலாளர் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி என்பது நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கான மையங்களில் காலக்கெடு எதையும் மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு வழங்கவில்லை. தேவைக்கு ஏற்ப, தடுப்பூசி மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் தடுப்பூசிகளை மக்களுக்கு அரசு செலுத்தலாம். இந்த அடிப்படையில், இனி இரவு பத்து மணிவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். தடுப்பூசி மையங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மையங்களில் இனி பொதுமக்களின் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com