\
எஸ்பிபி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை - மகன் சரண்

எஸ்பிபி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை - மகன் சரண்

எஸ்பிபி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை - மகன் சரண்
Published on

எஸ்பிபி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் முன்னேற்றமில்லாமல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் சந்திரசேகர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் எஸ்பிபிக்காக கூட்டுப்பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த கூட்டுப்பிரார்த்தனை இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில், எஸ்பிபி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ள ஒவ்வொருவருக்கும், பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி எனவும் அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். மேலும், உங்களின் அனைவரது பிரார்த்தனையும் எஸ்பிபியை மீட்டெடுக்கும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com