\
தேனி: கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் எடுத்துச் செல்லும் அவலம்

தேனி: கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் எடுத்துச் செல்லும் அவலம்

தேனி: கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் எடுத்துச் செல்லும் அவலம்
Published on

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கவச உறையில் வைத்து உறவினர்களே எடுத்துச் சென்ற புகைப்படங்கள் வெளியான நிலையில் ஊழியர்கள் 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தேனி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் ஊழியர்கள் அல்லாதவர்கள் பாதுகாப்பு உடை எதுவும் இன்றி உயிரிழந்தவரின் உடலை கவச உறையில் வைத்து எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் வெளியானது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணையில் ஆள்பற்றாக்குறை காரணமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அவரது உறவினர்களே பிணவறையில் வந்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பிணவறையில் அலட்சியமாக பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் மற்றும் காவலாளியையும் பணியிடைநீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com